ராசிபுரத்தில் பேருந்து சக்கரம் கழன்ற விவகாரம் - 7 பேர் இடைநீக்கம்.!
seven peoples suspend for wheel run issue in rasipuram
ராசிபுரம் அருகே அரசு பேருந்தில் இருந்து சக்கரம் கழன்று ஓடிய விவகாரம் தொடர்பாக கிளை மேலாளர் உட்பட ஏழு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, 20க்கும் மேற்பட்ட பயணியருடன், அரசு பேருந்து ஒன்று சேலத்தை நோக்கி, நேற்று காலை புறப்பட்டது. இந்தப் பேருந்து வீரமலை ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது, இடதுபுற முன்பக்க சக்கரம் தானாக கழன்று ஓடி, ஓடையில் விழுந்தது.
உடனே பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். இதையடுத்து பயணிகள் பேருந்தில் இருந்து கேழே இறங்கி மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த, அரசு போக்குவரத்து சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் விசாரணை நடத்தியதில், பேருந்துக்கு கடந்த மாதம், 9ம் தேதி வீல் சர்வீஸ் செய்யப்பட்டு, டதுபுற வீலுக்கு பேரிங் மாற்றியது தெரிய வந்தது.
ஆனால், வாராந்திர பராமரிப்பு பணி, சோதனை ஓட்டம் நடத்தவில்லை. இதனால் டயர் கழன்றது தெரியவந்தது. எனவே, பணியில் அலட்சியம் காட்டிய ராசிபுரம் கிளை மேலாளர் துரைசாமி, இளநிலை பொறியாளர் தியாகு, போர்மேன் வெங்கடேஷ்வரன், தொழில்நுட்ப பணியாளர்கள் தர்மலிங்கம், செந்தமிழ்செல்வன், செல்வராஜ், மணிராசு என்று ஏழு பேரை, சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
English Summary
seven peoples suspend for wheel run issue in rasipuram