தமிழகத்தில் தொடங்கியது மீன்பிடித் தடைக்காலம்!
Fishing ban Start 2025 April
தமிழகத்தில் மீன்வள பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்ட 61 நாட்கள் விசைப்படகு மீன்பிடித் தடைக்காலம் இன்று (ஏப். 15) தொடங்கியுள்ளது.
ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை இந்த தடைகளும் அமலுக்கு வருகிறது. இந்த தடைக்காலத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,650-க்கும் அதிகமான விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, சோளியகுடி உள்ளிட்ட துறைமுகங்களில் மீனவர்கள் தங்களுடைய படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட படகுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
தடைக்காலத்தை ஒட்டி, இந்தியா–இலங்கை மீனவர்களுக்கிடையிலான நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண, மத்திய அரசு உரையாடலுக்கு முன்வர வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.
English Summary
Fishing ban Start 2025 April