தடையை மீறினால் கைது செய்யுங்கள்! அண்ணாமலைக்கு எதிராக போர்கொடி.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள நடைபயணத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் மணிப்பூர் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வசீகரன் தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் நடைப்பயணத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அப்போது பேசிய அவர் "ஊழலைப் பற்றி பேசுகின்ற யோகிதை, கேட்கின்ற யோகிதை அண்ணாமலைக்கு இல்லை. எனவே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த நடைபயணத்திற்கு தடை விதிக்க வேண்டும். அதனை மீறி சென்றால் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும். 

அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் கலவரம் தூண்டும் நோக்கில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அண்ணாமலையின் நடை பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aam Aadmi Party demands ban on Annamalai hiking


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->