மதமாற்ற நிகழ்ச்சி விவகாரம் : டெல்லி அமைச்சர் ராஜினாமா! - Seithipunal
Seithipunal



10,000 பேர் பௌத்த மதத்திற்கு மாறிய நிகழ்ச்சில் டெல்லி அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் கலந்துகொண்ட காணொளி வெளியான நிலையில், இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், பி.ஆர்.அம்பேத்கரின் 22 சபதங்களை எடுத்துக்கொண்டு, இந்துக் கடவுள்கள், தெய்வங்களை பிரார்த்தனை செய்ய மாட்டோம் என்ற நிகழ்ச்சி நடந்தது. கிட்டத்தட்ட இதில் 10,000 பேர் பௌத்த மதத்திற்கு மாறியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மதமாற்ற நிகழ்வில் டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் கலந்துகொண்டது சர்ச்சையானது.

இதனை கையிலெடுத்த பாஜக, அமைச்சரை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. இதற்க்கு அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம், "அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி, தனது மதத்தை கடைப்பிடிக்க தனக்கு உரிமை உண்டு" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, டெல்லி பாஜக பிரதிநிதிகள் துணை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து அமைச்சர் மீது புகார் அளித்தனர்.

இந்நிலையில்,  அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், "நாட்டின் பல கோடி மக்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் சத்தியப் பிரமாணங்களால் இத்தகைய பிரச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. பாஜக அதை ஒரு பிரச்சினையாக்கி, என்னையும், எனது கட்சியையும் அவமதிக்க முயற்சிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AAP delhi Minister Rajendra Pal Gautam resignation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->