விஜய் கட்சியின் முதல் கூட்டணி அறிவிப்பு? தமிழ்நாடு முஸ்லிம் லீக் முழு ஆதரவு!
Action Alliance Muslim League TVK Party
தமிழ்நாட்டில் புதிய கட்சியாக நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தொடங்கியது அனைவரும் அறிந்தவை. அடுத்த ஆண்டு தேர்தலுக்காகத் தற்போது, வெற்றிக் கழகமானது தனது முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது . அதைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜனா இருவரையும், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா அவர்கள் தன்னுடைய ஆதரவாளர்களுடன் நேற்று நேரில் சென்று சந்தித்தார்.

ஆதரவு தெரிவித்த முஸ்தபா:
மேலும் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா அவர்கள், தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்குத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கூறும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக முஸ்தபா தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சந்திப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெற்றிப் படிக்கட்டாக அமையும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சித் தலைவர் விஜய், தன் அரசியல் பயணத்தில் மக்களுக்கு நன்மைகள் பல செய்வார் என அவர்களால் உறுதியாகத் தெரிவிக்கப்படுகிறன. இதைத்தொடர்ந்து விஜய் சட்டமன்றத் தேர்தலுக்காகப் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்தவை.
English Summary
Action Alliance Muslim League TVK Party