69-வது படத்தை கைவிடுகிறாரா விஜய் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்தார். மேலும், 'கோட்' படத்துக்கு பிறகு இன்னொரு படத்தில் நடித்து விட்டு முழு நேர அரசியலில் இறங்குவேன் என்றும் தெரிவித்தார்.

இதனால், விஜய்யின் கடைசி படமான 69-வது படத்தை இயக்குவது யார்? அதில் யாரெல்லாம் நடிப்பார்கள். படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றெல்லாம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் 69-வது படத்தை கைவிட விஜய் முடிவு செய்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, அடுத்த சட்டமன்ற தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. விஜய் 69-வது படத்தில் நடிக்க தொடங்கினால் அது முடிய ஒரு வருடம் ஆகிவிடும். இதனால் அரசியல் மற்றும் தேர்தல் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்படும். 

அதனால், இப்போதே சுற்றுப்பயணம், மாநாடு, மாவட்டம் தோறும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என்று அரசியல் பணிகளை தீவிரப்படுத்தினால் தான் தேர்தல் களத்தை வலிமையோடு சந்திக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதனாலேயே 69-வது படத்தில் விஜய் நடிக்க மாட்டார் என்று பேசப்படுகிறது. ஆனாலும் விஜய் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay abandoning 69th movie for political


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->