கட்சி பெயரை மாற்றிய விஜய் - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு. 

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பிறகு, வரும் மக்களவை தேர்தல்முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான, எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நமது அரசியல் பயணம் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே “தமிழக வெற்றி கழகம்” என்ற அவரது கட்சியின் பெயரில், ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். அதுமட்டுமல்லாமல், கட்சிப் பெயரிலேயே தவறு இருப்பதாக பிற கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். 

இந்த நிலையில், தனது கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று மாற்ற நடிகர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் "தமிழக வெற்றிக் கழகம்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay change political party name


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->