யார் தயவும் இல்லாமல் மாநிலக் கட்சி அந்தஸ்து - நாம் தமிழர் கட்சிக்கு கஸ்தூரி வாழ்த்து! - Seithipunal
Seithipunal


கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி இயக்குனர் சீமானால் தொடங்கப்பட்டது நாம் தமிழர் கட்சி. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி. பா. ஆதித்தனார் நடத்தி வந்த நாம் தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியே இந்த நாம் தமிழர் கட்சி என்று கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தான் முதன் முதலில் களமிறங்கியது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட இந்த கட்சி 1.07 சதவீத வாக்குகளை பெற்று 9ம் இடத்தில் இருந்தது.

இதையடுத்து 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்தை அணுகிய போது, அதை மறுத்த தேர்தல் ஆணையம் அப்போது விவசாயி சின்னத்தை இந்த கட்சிக்கு ஒதுக்கியது. 

இதையடுத்து 2024 மக்களவைத் தேர்தலுக்கு மைக் சின்னத்தில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தற்போது மாநிலக் கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது சமூகவலைதளப் பதிவில், "ஆரம்பத்தில் சின்னத்தை பறித்துவிட்டார்கள். யாருடைய தயவும் இல்லாமல், அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது, எந்த விளம்பரமும் இல்லை. இருந்தபோதிலும் பல தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளியுள்ளது NTK .

தற்போது 8.9 சதவீத வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சியின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வந்துள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைத்துவிட்டதால் இனி மைக் சின்னம் நிரந்தரம். வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Kasthuri Wishes NTK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->