#BREAKING : அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல்.!
admk appoved 16 resolutions
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. அதையடுத்து, 11 ஆம் தேதி (இன்று) பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்தது.
இந்த பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேற்கொண்டு வந்தனர்.
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பு வழங்கினார். அதன்படி, அதிமுக பொது குழுவிற்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக பொது குழுவிற்கு தடை விதிக்க வேண்டுமென ஓபிஎஸ் கோரிக்கை விடுத்த நிலையில், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்கப்பட்டு அதிமுக பொது குழுவிற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது எடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அதில் அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதலில் செயற்குழு கூட்டம் நடைபெறும். அதில் தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அதன் படி, 16 தீர்மானங்களுக்கு அதிமுக செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
English Summary
admk appoved 16 resolutions