ஆளுநரின் வாகனத்தை நோக்கி கருப்புக்கொடி வீசப்பட்டதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு.! - Seithipunal
Seithipunal


ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக சட்டமன்றத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

இந்தகவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எடப்பாடி கே பழனிச்சாமி, "ஆளுநரின் பாதுகாப்பில் காவல்துறை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்கவில்லை?; இது தமிழ்நாட்டு காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி.

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறையே பாதுகாப்பு கொடுத்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது; காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது" என்பர் தெரிவித்தார்.

பின்னர், மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனத்தை நோக்கி கருப்புக்கொடி வீசப்பட்டதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தனர்.

அப்போது, வெளிநடப்பு செய்கிறோம் என்று சொல்லிவிட்டு, சட்டப்பேரவையில் கோஷம் எழுப்பிவரும் அதிமுக எம்எல்ஏக்களை அவைக்காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk assembly out for governor issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->