ட்விட் முழுக்க சாம்பிராணி நெடி! கீழடி இவரது மாவட்டமா..? விருதுநகர் ஆட்சியரை பங்கம் செய்த அதிமுக..!! - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து 3ம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் உடன் பிறப்புகளும், அமைச்சர்களும், நிர்வாகிகளும் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் "விமர்சனங்களை பற்றி கவலைப்பட மாட்டேன், நல்லவைகளை எடுத்துக் கொள்வேன், கெட்டவைகளை புறந்தள்ளுவேன். இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து தான்" என பேட்டியளித்து இருந்தார்.

அதேபோன்று தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் பல்வேறு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தவிர திமுக அமைச்சர்கள் தங்களின் சொந்த செலவில் அனைத்து செய்தித்தாள்களிலும் பக்கம் பக்கமாக திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து விளம்பரம் செய்துள்ளனர். மேலும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக ஈடில்லா ஆட்சி இரண்டாண்டே சாட்சி என திமுக அரசின் இரண்டு ஆண்டுகால சாதனைகளை பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "ஈடில்லா ஆட்சி இரண்டாண்டே சாட்சி - இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு" என பதிவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சி குறித்து பெருமையுடன் பதிவிட்டதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள்  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயரசீலனை திமுகவின் மாவட்ட ஆட்சியர் எனவும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தனது ட்விட்டர் பக்கத்தில் "திமுக அரசை புகழும் விருதுநகர் மாவட்ட கலெக்டரின் ட்விட் முழுக்க சாம்பிராணி நெடி!

கீழடி இவரது மாவட்டமா? பத்து நாட்களுக்கு முன் மருத்துவமனை புகுந்து அரிவாள் தாக்குதல், நேற்று மணல் கடற்கரை தடுத்த முன்னாள் அமைச்சரை கொலை முயற்சி. இதெல்லாம் இவரது விருதுநகர் மாவட்ட ஆட்சிக்கு சாட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK criticizes Virudhunagar District Collector Twitter post


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->