திமுக-பாஜக கூட்டணி உறுதி - பரபரப்பை உண்டாக்கிய அதிர்ச்சி பேட்டி!
ADMK Edappadi Palanisamy Say About DMK BJP Alliance
மத்திய அரசின் தயவை எதிர்பார்த்து, பாஜகவை அழைத்து நாணயம் வெளியிட்டு விழாவை திமுக நடத்தியுள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
இன்று சேலம் ஓமலூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தாவது, "அண்மையில் நடந்த நாணய வெளியீட்டு விழா மாநில அரசால் நடத்தப்பட்ட விழா,மத்திய அரசால் அல்ல. இது கூட தெரியாமல் ஒரு விழா நடத்துகின்ற விடியா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவிற்கு எனக்கும் அழைப்பு வந்தது. இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களை திமுக ஏன் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை.
இந்தியா கூட்டணியில் உள்ள திமுக, என்டிஏ கூட்டணியை வைத்து நிகழ்ச்சியை நடத்தி உள்ளது. திமுகவும், பாஜகவும் வெளியில் எதிர்ப்பதை போல் இருந்தாலும், உள்ளே கூட்டணி வைத்துள்ளார்கள்.
அண்ணாமலை பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி அமைத்துள்ளார். மத்திய அரசு நாணயம் வெளியிட்டால்தான் புகழ் கிடைக்கும் என்பது போல் அண்ணாமலை பேசியுள்ளார். எம்ஜிஆர் வரலாறு தெரியாமல் அவரை சிறுமைப்படுத்தி அண்ணாமலை பேசியிருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, கடன் சுமை தான் அதிகரித்துள்ளது. பொய்களை மட்டுமே பேசுபவர் தான், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை உள்ளார்.
திமுக அரசை குற்றம்சாட்டினால், பாஜக மாநில தலைவர் என்னை குறைசொல்கிறார். திமுகவை போல பாஜகவும் இரட்டை வேடம் போடுகிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
English Summary
ADMK Edappadi Palanisamy Say About DMK BJP Alliance