பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் பீதியை கிளப்பும் எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாகவும், திறமையில்லாத முதலமைச்சர் ஸ்டாலின் என்றும், தமிழகத்தில் கொலை கொள்ளை திருட்டு சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, "ஸ்டாலின் அமைச்சரவையில் பெற்று இருக்கின்ற ஒரு நிதி அமைச்சர் ஆடியோவில் பேசுகிறார். 30,000 கோடி அந்த பணத்தை இரண்டு பேரை சொல்லி பேசி இருக்கிறார். 

ஸ்டாலின் மகனும், மருமகன் பெயர்களை குறிப்பிட்டு, இந்த இரண்டு பேரும் முப்பது ஆயிரம் கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறதாக சொல்கிறார்.

இதை சாதாரண ஒரு ஆள் சொல்லவில்லை. ஒரு நிதியமைச்சர் சொல்கிறார். ஆக நானும் அறிக்கையை விட்டேன். பேட்டி கொடுத்தேன். இதற்கு இதுவரை முதல்வர் ஸ்டாலின் மறுப்பே தெரிவிக்கவில்லை.

ஆனால் இந்த ஆடியோவில் பேசிய நிதியமைச்சர் பத்திரிகையின் வாயிலாக சில தகவல்களை தெரிவித்திருக்கிறார். பேசியது வெட்டி ஒட்டி வெளியிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். அப்படியானால் பேசியது உண்மை என்று ஆகிவிட்டது.

ஆக முப்பது ஆயிரம் கோடி இரண்டு ஆண்டுகளில் ஊழல் செய்த அரசாங்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான். ஏற்கனவே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் தான். 

இதனை இந்த நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள். திமுகவினருக்கு வேலை என்ன? கமிஷன், கலெக்ஷன், கரெக்ஷன். அதனால்தான் அவர்களால் 30 ஆயிரம் கோடி சம்பாதிக்க முடிந்தது" என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Say About PTR Audio issue 23


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->