டிடிவி ஃபைல் | லண்டனில் கோடி கணக்கில் உள்ள தினகரனின் சொத்தை அரசுடைமையாக்க வேண்டும்! எகிறும் எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal



பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியல் மற்றும் சில ஊழல் குறித்த தகவல்களையும் வெளியிட்டு இருந்தார்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவிக்கையில், அண்ணாமலையிடம் அதிமுகவினரின் ஊழல் பட்டியல், சொத்து பட்டியல் குறித்த விவரங்களை வெளியிடுவாரா என்று கேளுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு அவர், "அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட கூறும் டிடிவி தினகரன், அவருடைய ஊழல் பட்டியலை வெளியிட்டால்தான் சரிப்பட்டு வரும்.

ஏனென்றால் லண்டன் வரை சொத்து குவித்து வைத்துள்ளதாக அன்றைய தினமே திமுக செய்தி வெளியிட்டது. எனவே லண்டனில் உள்ள அவருடைய சொத்துக்களை எல்லாம் கண்டுபிடித்து அரசுடமையாக்க வேண்டும்" என்றார்.

பின்னர் அதிமுகவினர் ஒன்றும் புனிதர்கள் இல்லை என்று சீமான் கூறியதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அண்ணா திமுக வளர்ந்து கொண்டிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் திட்டமிட்டு குற்றம் தாட்டு வருகின்றனர்" என்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS SAY ABOUT TTV DHINKARAN FILE


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->