சிபிஐ விசாரிப்பதில் திமுக அரசுக்கு என்ன பயம்? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!
ADMK EPS Supreme Court CBI case DMK government
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ. மாற்றி உத்தரவிட வேண்டும் என்று, பாமக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பின் படி, சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இதற்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மு.க.ஸ்டாலினின் திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்தி, முடக்க நினைத்தே இந்த மேல்முறையீட்டை திமுக அரசு தாக்கல் செய்துள்ளது. சிபிஐ இந்த வழக்கை விசாரிப்பதில் திமுக அரசுக்கு என்ன பயம்?
கள்ளச்சாராய மரணங்களுக்கு திரு. ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற அரசின் அலட்சியப் போக்கே காரணமாக இருக்க, அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை இதனை விசாரிப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும்?
உச்சநீதிமன்றத்தில் உரிய சட்டப் போராட்டத்தை நடத்தி, மரணித்த 67 உயிர்களுக்கான நீதியை நிலைநாட்ட அதிமுக தொடர்ந்து போராடும்'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS Supreme Court CBI case DMK government