பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய விமானிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் - எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா AXB613 விமானம், தொழில்நுட்பக் கோளாறால் கடந்த சில மணி நேரங்களாக திருச்சி விமான நிலையத்தைச் சுற்றிய வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது பாதுகாப்பாக தரையிரக்கப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த மகிழ்ச்சியுற்றதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும், கடுமையான சமயத்தில் திறம்பட செயல்பட்டு அனைத்து பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய விமானிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவிக்கையில், "திருச்சியிலிருந்து 141 பயணிகளுடன் சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பின் அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட செய்தி நிம்மதியையும், மனநிறைவையும் தருகிறது. 

விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகள் மற்றும் குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS thanks to Trichy Air India express flight piolet


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->