செங்கோட்டையன் vs எடப்பாடி பழனிசாமி! அதிமுகவில் என்ன நடக்கிறது? அடுத்தடுத்த பேட்டி!
ADMK EPS vs Sengottaiyan
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் முன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆனால், இரண்டு நாட்களிலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
செங்கோட்டையன் ஏன் பங்கேற்கவில்லை?
இதுகுறித்து செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,
"ஏன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள். அவருக்கு வேறு வேலை இருக்கலாம். நான் யாரையும் எதிர்பார்க்கும் தன்மையிலில்லை. அ.தி.மு.க. சுயாட்சி கொண்ட கட்சி" என்று பதிலளித்தார்.
செங்கோட்டையன் பதில் சொல்ல மறுப்பு:
சட்டசபைக்கு வந்த செங்கோட்டையன் முதலில் சபாநாயகர் அறைக்கு சென்று அவரை சந்தித்து, பின்னர் அவை நடவடிக்கையில் கலந்து கொண்டார்.மேலும், இந்த சர்ச்சைகள் குறித்து செங்கோட்டையன் பதில் தர மறுத்துவிட்டார்.
செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்து தனியாக செயல்படுவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அ.தி.மு.க.வில் புதிய அதிகாரக் குழப்பத்துக்கான அறிகுறியா? என்ற விவாதம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.