உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டண உயர்வு உள்ளிட்டவையை கண்டித்து வரும் 3 ஆம் தேதி திருப்பூரில் அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிவிப்பில், "சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டண உயர்வு, ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு, பலமடங்கு தொழில் வரி உயர்வு, வணிக நிறுவனங்களிடம் வசூலிக்கும் வாடகைக்கு 18 சதவீத GST வரி விதிப்பு போன்ற பல்வேறு வரி மற்றும் கட்டணச் சுமைகளை திரும்பப் பெறுவதற்காக திருப்பூர் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், கழகக் கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும்; வரி உயர்வை அறிவித்த மக்கள் விரோத திரு. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கவுன்சிலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத அறப் போராட்டம்! 

இடம்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில்
நாள்: 3.12.2024- செவ்வாய் கிழமை - காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. 

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகர பகுதிக் கழகச் செயலாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திரு. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும்; மக்கள் நலனை முன்வைத்தும் நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், குறிப்பாக திருப்பூர் மாநகரத்தைச் சேர்ந்த அனைத்து வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், வியாபாரப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Fasting protest in trippur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->