#சற்றுமுன் | அமித் ஷா-வை சந்தித்த இபிஎஸ்! உடன் சென்ற அந்த 3 முக்கிய புள்ளிகள் யார்?!
ADMK GS EPS meet Amit shah
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சற்றுமுன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகாரத்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து உள்ளார்.
இந்த சந்திப்பின்போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்று தெரிய வருகிறது.
மேலும், தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை, கொலை, கொள்ளை, கஞ்சா புழக்கம், திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மேலும், அண்மையில் வெளியாகிய நிதியமைச்சர் தியாகராஜன் ஆடியோ குறித்தும், பாஜக அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமித் ஷாவுடனான இந்த சந்திப்பில் அதிமுகவின் முக்கிய புள்ளிகளும், முன்னாள் அமைச்சர்களுமான எஸ்பி வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம் உள்ளிட்டவர்களும் உடன் இருந்தனர்.
English Summary
ADMK GS EPS meet Amit shah