தண்ணீரில், கண்ணீரில் மக்கள்! 'உதயநிநி உதயநாள்' கொண்டாட்டத்தில் திமுக அடிமை அமைச்சர்கள் - அதிமுக ஜெயக்குமார் விமர்சனம்!
ADMK Jayakumar condemn to DMK Ministers
வெள்ளப் பாதிப்பால் மக்கள் கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கும் வேளையில், அமைச்சர்கள் 'உதயநிநி உதயநாள்' என பிறந்தநாள் கூட்டங்கள் நடத்தி கொண்டு இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டின் கடைநிலை மக்கள் கூட விழுப்புரம், திருவண்ணாமலை வெள்ளப் பாதிப்புகளை கண்டு கண்ணீர் விடும் இந்த வேளையில்...
பொறுப்புடன் செயல்பட வேண்டிய அமைச்சர்கள் 'உதயநிநி உதயநாள்' என பிறந்தநாள் கூட்டங்கள் நடத்தி கொண்டிருக்கிறார்கள்!
இந்த அடிமை அமைச்சர்களுக்கு விரைவில் மக்கள் பதில் சொல்வார்கள்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Jayakumar condemn to DMK Ministers