மக்கள் பாவம் இல்லையா? உங்கள் குடும்பம் மட்டும்... ஜெயக்குமார் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


இந்திய விமானப்படையின் 92 வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று சென்னை மெரினா கடற்கரையில் இந்திய ராணுவத்தின் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. 

காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சாரை சாரையாக திரண்டு வந்து கலந்து கொண்டனர். 

இந்நிலையில், இதற்க்கு சரியான ஏற்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் செய்யவில்லை என்றும், மக்கள் கடும் அவதிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.

குடிநீர்,உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. இரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை.

முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன!

இரண்டு‌ நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர்  பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார்.

காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது! நிர்வாகம்,கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார்" என்று ஜெயக்குமார் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar sat Failed DMK Govt Air Show


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->