கரூரில் ஆட்டத்தை ஆரம்பித்த செந்தில்பாலாஜி! எடப்பாடிக்கு பேரதிர்ச்சியான செய்தி!
ADMK Karur members joint to DMK Senthilbalaji
கரூரில் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்குங்கள் என்று திமுக தலைவர் அறிவுறுத்திய நிலையில், கரூரில் அதற்கான வேலையை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு தலைநிமிர, திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முக ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களே தமிழ் இளைஞர்களுக்கான நாளைய நம்பிக்கை என்று உணர்ந்து,
கரூர் மாவட்ட அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர், அஞ்சூர் ஊராட்சி துணைத்தலைவர் திரு. எஸ். சிவகுமார் அவர்கள் தலைமையில், கரூர் பரமத்தி வடக்கு ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர் திரு பி. நவீன்குமார் அவர்களுடன்,
அதிமுகவை சேர்ந்த திரு.பி.முருகேசன், செல்வி.வி.கீதா, திரு.டி.சிவகுமார், திரு.டி.செந்தில்குமார், திரு.எஸ்.பெரியசாமி, திரு.எம். சசிகுமார், திரு.பி.சங்கரலிங்கம், திரு.ஆர். குணா, திரு.எம்.சசிகுமார், திரு.ஆர். சசிகுமார், திரு.ஏ.சக்திவேல், திரு.எஸ்.கே.மோகன் மற்றும் திரு. எஸ். ரமேஷ் ஆகியோர், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.பி.ஆர். இளங்கோ அவர்கள் முன்னிலையில், தங்களை கழகத்தில் இன்று இணைத்துக்கொண்டனர்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Karur members joint to DMK Senthilbalaji