வாபஸ் வாங்கிய ஓபிஎஸ் - பொதுக்குழு வழக்கில் நீதிபதி எடுத்த திடீர் முடிவு.! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அதிமுகவின் பொதுக்குழு முடிவை எதிர்த்த ஓ பன்னீர்செல்வத்தின் வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதற்க்கு முன்னதாகவே, பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் மனு அளித்தார்.

ஆனால், ஓபிஎஸ்-ன் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனங்களை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மீண்டும் தலைமை நீதிபதி இடம், நீதிபதியை மாற்றக் கோரி முறையிட்டார்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 2:30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இடம் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியது. 

அப்போது நீதிபதி, உங்களுடைய மன்னிப்பை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தார். மேலும், தலைமை நீதிபதியிடம் கொடுத்த மனுவை திரும்ப பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதில், மன்னிப்பை மனுவாக தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பு மறுப்பு தெரிவித்தது. அதே சமயத்தில் தலைமை நீதிபதியிடம் கொடுக்கப்பட்ட மனுவை திரும்ப பெற்றதாக, ஓபிஎஸ் தரப்பில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுகவின் பொதுக்குழு வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்து, வேறு நீதிபதிக்கு இந்த வழக்கை மாற்ற கோரி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ops case in chennai hc another issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->