விடிய விடிய தொடர் மழை!...மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு! - Seithipunal
Seithipunal


காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில், காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக கடந்த வாரம் டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில், தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று வினாடிக்கு 15 ஆயிரத்து 929 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில்,  இன்று காலை 18 ஆயிரத்து 94 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. மேலும், காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.89 அடியாக உயர்ந்த நிலையில், தற்போது அணையில் 62.14 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Continuous rain at dawn water flow to mettur dam increased to 18 thousand cubic feet


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->