ஒகேனக்கல்லில் குறைந்த நீர்வரத்து : சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை!
Low water flow in hogenakkal tourists are prohibited to bath and drive in boat
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், கடந்த சில நாட்களாக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
மேலும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதற்கிடையே, நேற்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால், இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதன் காரணமாக, மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
English Summary
Low water flow in hogenakkal tourists are prohibited to bath and drive in boat