#BigBreaking | அதிமுக பொதுக்குழு வழக்கில் திடீர் திருப்பம் - ஓபிஎஸ் தரப்பு எடுத்த அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு விசாரணை செய்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை நாட ஓ பன்னீர்செல்வத்திற்கு அறிவுறுத்தியது. 

அதில், பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற அமர்வு முடிவு எடுக்கும். எனவே, உயர்நீதிமன்றத்திற்கு செல்லுமாறு ஓ பன்னீர்செல்வதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், அதிமுகவின் பொதுக்குழு முடிவை எதிர்த்து பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு நாளை (ஆகஸ்ட் 4) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கை பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக்கோரி, பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு அளித்துள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளரான வைரமுத்து அளித்துள்ள அந்த மனுவில், "ஏற்கனவே இந்த நீதிபதி வழக்குக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக, கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியாதவர்கள், நீதிமன்றத்தை நாடுவதாக தெரிவித்துள்ள கருத்து, இந்த வழக்குக்கு சம்பந்தம் இல்லாத கருத்து என்பதால், அவர் இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS Case new appeal to chennai hc head judge


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->