அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வருகை - பீதியை கிளப்பும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.!
admk ops side announce admk head office
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த மோதலை தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு, பின் நீதிமன்ற தீர்ப்பால் ஜூலை 21-ஆம் தேதி சீல் அகற்றப்பட்டது.
மேலும், அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், 72 நாட்களுக்கு பிறகு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை அதிமுகவின் தலைமைக் அலுவலகமான 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வந்தார்.
அலுவலகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்களான, அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., செல்வி ஜெ ஜெயலலிதா திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையே, அதிமுக அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமியையும், அவரது ஆதரவாளர்களையும் அனுமதிக்க கூடாது என்றும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுருக்கும் நிலையில் இறுதி தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்க கூடாது என்றும், ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாகவும், அவருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே சி டி பிரபாகர் மனு அளித்துள்ளார்.
மேலும், அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் செல்லும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஜே சி டி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
English Summary
admk ops side announce admk head office