மெஜாரிட்டி : ஓபிஎஸ் vs இபிஎஸ் - தேர்தல் ஆணையத்தில் இருந்து வந்த பரபரப்பு தகவல்.!
admk ops vs eps tamilnadu ec info july
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த ஆவணங்களை, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு மனுவாக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களின் மீதான பரிசீலனை தற்போது நடத்திக் கொண்டிருக்கிறது. அதிமுக பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் எந்த தரப்பில் இருக்கிறார்கள். எத்தனை பேர் கையெழுத்து இடுகிறார்கள் என்பது போன்ற விஷயம் குறித்து தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
அதே சமயத்தில் ஓ பன்னீர்செல்வம் கொடுத்த புகார் குறித்தும் தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்து கொண்டிருக்கின்றனர்.
தேவை எனில் இரண்டு தரப்புகளையும் அழைத்து, அவர்களிடம் விசாரணை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இரண்டு தரப்பும் தங்களுடைய வழக்கறிஞர்கள் மூலம் தேர்தல் ஆணையத்தில் தங்களுடைய வாதங்களை முன் எடுத்து வைக்கலாம் என்று தெரிகிறது.
English Summary
admk ops vs eps tamilnadu ec info july