அதிமுக + புதிய தமிழகம் கூட்டணி.. 2026.,ஐ குறி வைத்த எடப்பாடி.!!
ADMK PT alliance continue until 2026 election
எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி இடம்பெறுவது குறித்து இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிருஷ்ணசாமியின் இல்லத்தில் இன்று நடைபெற்றது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்ட நிர்வாகிகள் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி "அதிமுகவுடன் வலுமையான கூட்டணி அமையும் எங்கள் விருப்பத்தை அதிமுக பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் நிலைப்பாடு அறிவித்த பிறகு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும்" என தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி "கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது. கிருஷ்ணசாமியின் விருப்பம் குறித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் எடுத்துரைப்போம். இந்த கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்" என தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK PT alliance continue until 2026 election