அதிமுகவினரின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
ADMK scam list also ready to release Annamalai press meet
இன்று திமுகவினரின் சொத்து பட்டியல் மற்றும் சில ஊழல் குறித்த தகவல்களை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.
இதில், திமுக எம்.பி.,க்கள் டிஆர் பாலு, கனிமொழி, அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, வேலூர், அன்பில் மகேஷ், உதயநிதி ஆகியோரின் கோடி கணக்கான சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.
மொத்தமாக ஒரு லட்சம் கோடிக்கு மேல் அதில் திமுகவினரின் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது முதல் பாகம் மட்டுமே, அடுத்த பக்கத்தில் ஆராசா, செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலரின் சொத்து பட்டியல், ஊழல் புகார்கள் வெளிவரும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், தான் வாங்கிய ரஃபேல் வாட்ச் குறித்த விவரங்களையும் அண்ணாமலை சற்று முன்பு வெளியிட்டுள்ளார். அத்ரக்கான ரசிதையும் செய்தியாளர்கள் முன்பு அண்ணாமலை காண்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் குறித்த 200 கோடி ரூபாய் லஞ்சம் விவகாரம் தொடர்பாக சிபிஐ.,யிடம் முறையிட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தில் தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சொத்து பட்டியலையும், அவர்கள் செய்த ஊழலையும் வரும் 2024 க்குள் அம்பலப்படுத்துவேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK scam list also ready to release Annamalai press meet