சூடுபிடிக்கும் ஓபிஸ்-ஈபிஎஸ் இடையேயான மோதல் .. ஓபிஎஸ்க்கு போட்டியாக ஈபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் கட்சியே இரண்டாகி நிற்கிறது.

இந்த மோதல் விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஓபிஎஸ் மாவட்ட வாரியாக தொண்டர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். அந்த வகையில், ஓபிஎஸ் இன்று மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

இந்த நிலையில் ஈபிஎஸ் சேலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளார். இவர்களுக்கு இடையே புதிய பரபரப்பை கிளப்பும் விதமாக சசிகலா ஒரு திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, சசிகலா இன்று முதல் தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார். அதற்காக காலை 11 மணியளவில் திருத்தணியில் இருந்து தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தான் பொதுச்செயலாளர் என அவர் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Single leader issue OPS, EPS and Sasikala meet ADMK supporters


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->