அடுத்த சிக்கலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.. இன்று விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி  ஆகியோர் இடையான அதிகாரம் முதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. 

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீண்டும் பொதுக்குழு வரும் 11 ஆம் தேதி நடைபெறும் என  அறிவித்து அதற்கான பணியில் ஈடுபட்ட வந்தனர். இதனுடைய உச்ச நீதிமன்றமும் பொதுக்குழுவிற்கு தடை இல்லை என தெரிவித்துள்ளது. இதனால் பொது குழுவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில். பி ஏ ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 5000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவிட உள்ளார் என பத்திரிகைகள் செய்தி வெளியாகி உள்ளது. கட்சியில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையிலான அதிகார பிரச்சனை சாதி ரீதியாக உருவெடுத்துள்ளது. மாநிலத்தில் சட்ட ஒழுக்கு சீர்குலைவை ஏற்படுத்தி உள்ளது. 

ஆகையால், இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் ஜூன் 22ஆம் தேதி மனு அளித்தார். ஆனால், அந்த மனு மீது தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி, ஜோசப் தொடர்ந்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk symbol case in chennai high court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->