செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவி தான்..!! ஸ்டாலினுக்கு முன்னால் அமைச்சர் வார்னிங்..!! - Seithipunal
Seithipunal


கரூரில் நடைபெற்ற திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பொதுக் கூட்டத்தில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தங்கமணி, எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்ட மேடையில் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி "முதல்வர் மு.க ஸ்டாலின் குடும்பத்தில் உள்ளவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ரொம்ப நம்புகிறார்கள். 

ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி இவர்கள் அனைவரையும் கீழே தள்ளிவிட்டு அடுத்த முதல்வராகி விடுவார். இதை நான் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு எச்சரிக்கையாக கூறுகிறேன். ஏனென்றால் கரூரில் நடக்கின்ற எந்த ஒரு விஷயத்தையும் உளவுத்துறை முதல்வரின் கண்காணிப்பிற்கு கொண்டு செல்வதில்லை. கரூரில் இருக்கும் உளவுத்துறை செந்தில் பாலாஜியின் உளவுத்துறை. அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன சொல்கிறாரோ அதைத்தான் உளவுத்துறை கேட்கிறது" என முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk thangamani said Minister Senthil Balaji next target was CM post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->