இதற்கே துணிவில்லாத நீங்கள் எப்படி சமூகநீதியை காப்பீர்கள்? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கொந்தளிக்கும் எதிர்கட்சி.!! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ் எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணி புரிந்து வருபவர் ராஜேந்திரன். இவர் கடந்த மார்ச் 27ஆம் தேதி அமைச்சர் ராஜகண்ணப்பன் அழைப்பை ஏற்று, அவரை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சாதிப்பெயரை கூறியதாகவும், வேறு மாவட்டத்திற்கு அவரை பணியிடை மாற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார் என்றும் ராஜேந்திரன் புகார் தெரிவித்து இருந்தார். இதனால் தான் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள தனது டிவிட்டர் பதிவில், அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்தும் இலாகா மாற்றம் என்பது தான் நீங்கள் வழங்கும் உட்சபட்ச தண்டனையா? இது தண்டனையா அல்லது பரிசா?  ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அவமதித்த அமைச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூட துணிவில்லாத நீங்கள் எப்படி சமூகநீதியை காப்பீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk tweet for raja kannappan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->