காலை 7 மணிக்கே பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு - அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய கல்வித்துறை யோசனை.! - Seithipunal
Seithipunal


கோடை வெப்பம் காரணமாக பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று, மத்திய கல்வித்துறை யோசனை தெரிவித்துள்ளது.

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு தற்போது அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் பள்ளி வகுப்புகள் காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகல் முடித்துக்கொள்ளவேண்டும் என்று, மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கடுமையான வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

பள்ளிகளில் நடத்தப்படும் வழிபாட்டை நிழலாக உள்ள பகுதியில் நடத்த வேண்டும் என்றும், கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெயில் அதிகமாக இருப்பதால், மாணவர்களுக்கு விளையாட்டுகளை காலை நேரத்திலேயே நடத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பள்ளி வாகனங்களில் அதிக அளவில் மாணவர்களை ஏற்றக் கூடாது என்றும், முதலுதவி வாகனங்களில் இருப்பது அவசியம் என்றும், முடிந்தளவு தங்களது குழந்தைகளை பெற்றோர்களே பள்ளிக்கு அழைத்து வரலாம் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 இதுமட்டுமல்லாமல் கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், பள்ளி சீருடையில் தளர்வு அளிக்க வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

advice for school open time change for summer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->