ஆன்லைன் டிரேடிங் மோசடி..ரூ.92 லட்ச ரூபாய் பணத்தை இழந்த பிரபல தொழிலதிபர்! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் டிரேடிங்கில் மூலம் புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ரூ.92 லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.

புதுச்சேரி,ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொழில் நடத்திவரும் தொழிலதிபர் முத்துகிருஷ்ணன். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அவருடைய வாட்ஸ் அப்பிற்கு நீங்கள் ஏதாவது தொழில் செய்ய வேண்டுமா நீங்களே ஆன்லைன் டிரேடிங் ஈடுபடலாம் என்று வந்த இணைப்பை கிளிக் செய்து பார்த்தபோது மிக எளிமையாக ஆன்லைன் டிரேடிங் செய்து சம்பந்தமாக பெண் ஒருவர் இரண்டு நாட்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறார்.

 atநல்ல லாபம் வரும் என்றும் சொல்லியிருக்கிறார் அதை நம்பி முதலில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்த போது முதல் நாளில் 16 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது அதை நம்பி கடந்த 30 நாட்களாக 88 லட்ச ரூபாய் அளவுக்கு முதலீடு செய்து செய்துவிட்டு தன்னுடைய ஆப்பில் அவருக்கு மூன்று கோடி அளவிற்கு பணம் இருப்பதாக காட்டியது பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது நிறைய உங்களுக்கு வருமானம் வந்துள்ளது அதனால் ஜிஎஸ்டி இன்கம் டேக்ஸ் கட்டினால் தான் உங்களுடைய பணத்தை எடுக்க முடியும் என்று அந்த போலியான டிரேடிங் ஆப்பிள் பதில் வந்துள்ளது அதை நம்பி மீண்டும் பணம் அனுப்பி உள்ளார் அதிலிருந்து பணத்தை எடுக்க முடியாமல் போகவே தான் ஏமாந்தது உணர்ந்து இன்று இணைய வழி காவல் நிலையத்தில் வந்து புகார் கொடுத்தார் அது சம்பந்தமாக இணையவழி போலீசார் புகாரை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது பற்றி இணைய வழி காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்வது என்னவென்றால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐந்து கோடி ரூபாய் அளவிற்கு போலியான ஆன்லைன் டிரேடிங்கில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்து   பணத்தை இழந்துள்ளனர். இது போன்ற போலியான ஆப்பிள் பணத்தை முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார். நீங்கள் பணம் அனுப்புவதற்கு முன்பு அது உண்மையான டிரேடிங் பிளாட்பார்மா என உறுதி செய்துவிட்டு அல்லது இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணைய வழி காவல்துறையினர் அணுகி தங்களின் சந்தேகத்தை தீர்த்துக் கொண்டு பின் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். ஆன்லைன் டிரேடிங்  கிரிப்டோ கரன்சி போன்றவற்றில் முதலீடு செய்யும் போது அதனுடைய உண்மைத்தன்மை தெரிந்து கொள்ள தாராளமாக நீங்கள் இணைய வழி காவல் துறையினரை அணுகலாம் என்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கின்றார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Online Trading Fraud Businessman loses Rs 92 lakh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->