மக்களவையில் மேலும் ஆதிக்கம் செலுத்தும் பாரதிய ஜனதா கட்சி, இதற்க்கு மற்ற தலைவர்களும் ஆதரவு !!
again bjp dominating in loksabha
18வது மக்களவை தேர்தல் முடிந்த பிறகு. புதிய மோடி 3.0 அரசு பதவியேற்றது, மேலும் மக்களவையை வழிநடத்த புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டும். எப்போதும், மக்களவை சபாநாயகர் பதவியை ஆளும் கட்சியே வகிக்கும். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் இந்த கூட்டு ஆட்சியில் மக்களவை சபாநாயகர் பதவி மீது மோதல் ஏற்பட வாய்ப்புகள் இருந்தன. ஆனால் பாஜகவின் மிகப்பெரிய கூட்டணிக் கட்சிகளான ஜே.டி.யு மற்றும் டிடிபி ஆகியவை பாஜகவின் விருப்பத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.
ஜேடியு மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. தற்போது மக்களவை சபாநாயகர் பதவிக்கான பாஜக வேட்பாளரை இந்த இரு கூட்டணிக் கட்சிகளும் ஆதரித்து உள்ளது. ஜனதா தளம்-யுனைடெட் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியில் வலுவாக உள்ளதாக மக்களவை சபாநாயகர் பதவி குறித்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் கே.சி.தியாகி தெரிவித்தார்.
புதிய மக்களவையில் மோடி 3.0 உருவான பிறகு, முதல் முறையாக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எம்.பி.,க்கள் சபை கூடுகிறது. இதில், மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல், வருகின்ற ஜூன், 26ஆம் தேதி நடக்க உள்ளது. புதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வருகின்ற ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது. மேலவை கூட்டங்கள் வருகின்ற ஜூன் 27ம் தேதி தொடங்குகிறது.
மோடியின் முதல் ஆட்சியில், சுமித்ரா மகாஜன் மக்களவையின் சபாநாயகராகவும், பின்னர் 2019 முதல் 2024 வரை ஓம் பிர்லா சபாநாயகராகவும் இருந்தனர். தற்போது ஓம் பிர்லாவை மீண்டும் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவாரா அல்லது வேறு யாராவது இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சிக்குள் சபாநாயகர் பதவிக்கு டி.புரந்தேஸ்வரியின் பெயர் விவாதத்தில் உள்ளது.
புரந்தேஸ்வரி ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மகள். இவர் ஆந்திராவின் தற்போதைய முதல்வர் என் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனர் . மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் கட்சி கோரியதை அடுத்து, அவரது பெயரை முன்வைத்து பாஜக அவர்களை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
English Summary
again bjp dominating in loksabha