வேளாண் பட்ஜெட் 2022-2023: விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை வாசித்து வருகிறார்.

அதன்படி, நெல்லுக்கு பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட மாற்று பயிர்களை சாகுபடி செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பயிறு வகை விதைகளை மானியத்தில் வழங்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த ரூ. 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். ரூ. 12 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு உயர் ரக மரங்கள் வழங்கி மரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும். மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவுக்கு ரூ. 5,157 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agriculture Budget 2022 for Agriculture Tools


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->