வேளாண் பட்ஜெட் 2022-2023: விவசாய பணிகளில் ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு புதிய திட்டம்.!
Agriculture Budget 2022 for Drone
தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை வாசித்து வருகிறார்.
அதன்படி, பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாய பணிகளில் ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு ரூ. 10 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
உழவர் சந்தைகளில் மாலை நேரத்திலும் சிறுதானியம், பயிறு வகைகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் காப்பீடு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ. 2,546 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசு மாணவியர் விடுதிகளில் காய்கறி, பழங்கள், மூலிகை தோட்டம் அமைக்கப்படும். 200 விடுதிகளில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் செய்யப்படுத்தப்படும்.
English Summary
Agriculture Budget 2022 for Drone