வேளாண் பட்ஜெட் 2022-2023: இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேளாண்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.!
Agriculture Budget 2022 for Organic Organic
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை வாசித்து வருகிறார்.
அதன்படி, தமிழ் இலக்கியங்களில் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்து இடம்பெற்றுள்ளன. விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற நிலைபாட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டது தான் வேளாண் பட்ஜெட்.
உழவு தொழில் உன்னதம் நிறைந்தது என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் வேளாண் பட்ஜெட் தாக்கல். கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 86 அறிவிப்புகளில், 80 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக ரூ.154 கோடி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண சிறப்பு குழு அமைக்கப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
60,000 தமிழக விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
English Summary
Agriculture Budget 2022 for Organic Organic