வேளாண் பட்ஜெட் 2022-2023: விவசாயிகளுக்கு சோலார் பம்புசெட்கள்.!!
Agriculture Budget 2022 for Solar Pump sets
தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை வாசித்து வருகிறார்.
அதன்படி, ரூ. 65 கோடியில் 3 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் பம்புசெட்கள் வழங்கப்படும். டெல்டா பகுதியில் பாசன கால்வாய்களை தூர்வார ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
வேளாண் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க ரூ. 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 38 கிராமங்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் மையங்கள் அமைக்க ரூ. 95 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தென்னை, மா, கொய்யா, வாழை தோட்டங்களில் ஊடுபயிர்களை ஊக்குவிக்க ரூ. 27.51 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தேனீ வளர்ப்பு திட்டத்துக்கு ரூ. 10.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ. 175 கோடியில் புதிய நீர்வழிப்பாதை மேம்பாடு 2.0 திட்டம் செய்யப்படுத்தப்படும்.
English Summary
Agriculture Budget 2022 for Solar Pump sets