அதிமுக பொதுக்குழு வழக்கு.. இடைக்கால உத்தரவு வருமா..?? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் உச்ச கட்சி பிரச்சனை காரணமாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவில் கடந்த ஜூலை 23ஆம் தேதி பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நபர் நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தற்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு ஜன.4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று பிற்பகல் 2 மணி அளவில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இன்று நடைபெறும் விசாரணையில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK case hearing in Supreme Court today


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->