#பதறாதீங்க_ஸ்டாலின் || இது கோழைத்தனம்! இப்போ ஒளிபரப்ப தயாரா? திமுகவுக்கு அதிமுக நேரடி சவால்!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சிறைகளில் வாடும் இஸ்லாமிய கைதிகள் விடுதலை குறித்தான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் மீதான விவாதம் நடைபெற்ற போது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 

இந்த விவாதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசிய காணொளி மட்டுமே தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய காணொளிகள் நேரலையில் ஒளிபரப்பப்படவில்லை. இதற்கிடையே இஸ்லாமியர்கள் நலனுக்காக அதிமுக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என மு.க ஸ்டாலின் கறிய குற்றசாட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க சபாநாயகர் அனுமதி வழங்காததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். 

இதற்கிடையே திமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் "அதிமுக தயாரா? இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மீது உண்மையாக அக்கறை இருக்குமானால் ஆளுநரை சந்தித்து கோப்புகளுக்கு ஒப்புதல் கொடுக்குமாறு அழுத்தம் தருவதற்கு அதிமுக தயாரா?" கேள்வி எழுப்பி இருந்தது. 

அதற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் இருந்து "#பதறாதீங்க_ஸ்டாலின் நீங்கள் இங்கு கேட்டுள்ள கேள்விக்கு எங்கள் பொதுச் செயலாளர் சட்டமன்றத்திலேயே அக்கறையோடு பதில் அளித்து விட்டார். அந்த பதிலை தாங்கள் கோழைத்தனமாக நேரலையில் ஒளிபரப்பவில்லை. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அளித்த பதிலை விடியா அரசு தற்போது ஒளிபரப்ப தயாரா?" என சவால் விடுத்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK challenged to DMK MKStalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->