ஒன்று சேரும் அதிமுக? - ரகசியத்தை போட்டுடைத்த புகழேந்தி! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக நிலையை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும்,  அதிமுக தலைவர்கள் பலர் பாஜவுக்கு ஜால்ரா தட்டுகிறார்கள் என்றும், இதையெல்லாம் அதிமுக தலைவர்கள் நினைத்து பார்த்து ஒன்று சேர வேண்டும் என்று கூறினார். 

மேலும் சசிகலா அவ்வப்போது வெளியில் வந்து, அதிமுகவைச் சேர்த்துவைக்கிறேன் என்று கூறிவிட்டு, வீட்டுக்குள் சென்று விடுவதாக தெரிவித்த அவர், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரை சசிகலா அழைத்து பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதிமுகவில் பல்வேறு பதவிகளை அனுபவிக்கும்  கே.பி.முனுசாமி. அவருக்கு எதுஅனுகூலமோ, அவரை எது வாழவைக்கிறதோ, அங்கு சேர்ந்து கொள்வார் என்றும், வரும், 2026-ல் அதிமுக தோல்வியடைந்தால் எங்களையும் சேர்த்து தொண்டர்கள் துரத்தி துரத்தி அடிப்பர் என்று ஆவேசம் அடைந்த புகழேந்தி, பொறுப்பை உணர்ந்து, தொண்டர்களின் கருத்தை மதித்து, நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK coming together Pugalenthi who solved the secret


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->