இளிச்ச வாயன் மாதிரி தெரியுதா.. வேலைய பாருயா.. பாஜகவை நார் நாராக கிழித்த அதிமுக.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வைத்து எங்களை மிரட்ட நினைத்ததால் ஆண்மையோடு கூட்டணி விட்டு வெளியேறியவர் ஈபிஎஸ் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக பொருளாளர் மாண திண்டுக்கல் சீனிவாசன "அடுத்த பிரதமர் மோடி என்கிறான்... அடுத்த முதலமைச்சர் அண்ணாமலை என்கிறான்.. எங்கள பாத்தா இளிச்ச வாய மாதிரி தெரியுதா.?

நாங்க உங்க பிரதமருக்கு ஓட்டு போடனும்.. நீங்க முதலமைச்சரா அண்ணாமலை பேர சொல்லுவீங்க... உங்கள் பின்னாடி காவடி எடுத்துட்டு வரணுமா... போய் வேலையை பாருங்கய்யா.. 

ஆண்மையோடு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எப்படி வெளியே வந்தாரோ அது போல அமித் ஷா கிட்டயும் , நட்டா‌கிட்டயும் பிஜேபி கூட்டணியில் இல்லைனு சொல்லிட்டு ஆண்மையோடு எடப்பாடியார் வெளியே வந்துள்ளார். 

இங்க இருக்கிற பன்னீர்செல்வத்தையும் ஆதரிக்கின்ற நண்பர்கள்... ன தினகரனை ஆதரிக்கும் நண்பர்கள்... சசிகலாவை ஆதரிப்பவர்கள் யாராவது இருந்தால் தயவு செய்து மறு சிந்தனை பண்ணுங்க. நீங்கள் எல்லாம் அவர்களோடு இருக்க வேண்டுமா? மண் குதிரையை நம்பி போக வேண்டுமா?" என திண்டுக்கல் சீனிவாசன் கடுமையாக விமர்சனம் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aiadmk Dindigul sreenivasan criticized BJP Annamalai amitsha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->