ஜூன் 14ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு.!
AIADMK district secretaries meeting on June 14
அதிமுக பொதுக்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் நடைபெறும் என்று அதிமுக தலைமை முன்னதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பொதுக்குழு கூட்டம் தொடர்பான அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொள்கின்றனர். எனவே, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
English Summary
AIADMK district secretaries meeting on June 14