அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி - மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் விடியா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக, வேளாண் பெருமக்களுக்கு ஆதரவாக, அதிமுக என்றென்றும் துணை நிற்கும் என்று, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "எனது தலைமையிலான அம்மா அரசில் தொடங்கப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ், அவினாசி சட்டமன்றத் தொகுதியில், அவினாசி மற்றும் அன்னூர் தாலுகாக்களைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள வேளாண் நிலங்களுக்கும் பாசன வசதி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் காரணமாக தங்களது நிலங்களில் உழவுப் பணிகளை மேற்கொள்ளலாம்;

இதன்மூலம் தங்களது வாழ்வாதாரம் மேம்படும் என்று இப்பகுதி விவசாயிகள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், இந்த விடியா அரசு அவினாசி, அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாக்களில் உள்ள 6 ஊராட்சிகளில், சுமார் 3800 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, டிட்கோ சார்பில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று 16.8.2021-ல் அரசாணை வெளியிட்டு, அப்பகுதி வேளாண் மக்களின் தலையில் இடியை இறக்கியது.

உடனடியாக, கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான திரு. S.P. வேலுமணி, M.L.A., அவர்கள், கழகத்தின் சார்பில் வேளாண் நிலங்களில் தொழிற்பேட்டையை அமைத்திட முயலும் இந்த விடியா திமுக அரசைக் கண்டித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அக்கரை செங்கப்பள்ளியில் நடைபெற்ற 6 ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. P.R.G. அருண்குமார் அவர்கள் கழகத்தின் சார்பில் கலந்துகொண்டு, விடியா அரசுக்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்ததோடு, சென்னையில் தொழில் துறை அமைச்சரை நேரில் சந்தித்து விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதன் காரணமாக அப்பகுதி விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து அப்பகுதி மக்கள் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, 28.11.2022 அன்று ஒதிமலை ரோடு, அன்னூரில் விவசாயப் பெருமக்கள் நடத்திய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், எனது அறிவுறுத்தலின் பேரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான திரு. S.P. வேலுமணி, M.L.A., கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. P.R.G. அருண்குமார் M.L.A., கழக அமைப்புச் செயலாளரும், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் தலைவருமான திரு. ப. தனபால், M.L.A., கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. A.K. செல்வராஜ், M.L.A., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. தி.க. அமுல்கந்தசாமி, M.L.A., ஆகியோரும், அப்பகுதியில் உள்ள கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டு, உடனடியாக இந்த அரசாணையை ரத்து செய்யாவிட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று விடியா திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார்கள்.

மேலும் கழகத்தின் சார்பில், 2.12.2022 அன்று கோவையில், விடியா திமுக அரசின் ஆட்சியில் கோவை மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதைக் கண்டித்தும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு போன்ற மக்கள் விரோதப் போக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் விடிய திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்துகொண்டு பேசியபோது, அவினாசி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தும் இந்த விடியா அரசை கண்டித்துப் பேசினேன். 

மேலும், தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளில் இந்த விடியா அரசு ஈடுபட்டால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தேன். இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் விருப்பம் இல்லாமல் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று விடியா திமுக அரசு ஒரு அரசாணையை இந்த வாரம் வெளியிட்டுள்ளது. இது, இப்பகுதி விவசாயப் பெருமக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.

விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களது வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இந்த விடியா அரசு ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். மேலும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக என்றென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும் என்று மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி K.பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Edappadi k palanisami Annur Issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->