சோகத்தில் மூழ்கிய அதிமுகவினர்! வேதனையில் எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் T. ராதாகிருஷ்ணன் மறைவுக்கு, அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், "விருதுநகர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளரும், விருதுநகர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு. T. ராதாகிருஷ்ணன் அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

கழகத்தின் மீதும், தொடர்ந்து கழகத் தலைமையின் மீதும், மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு திரு ராதாகிருஷ்ணன் அவர்கள். விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் கழகப் பணிகளை ஆற்றியுள்ளார். அதே போல், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டும் சிறந்த முறையில் மக்கள் பணிகளை ஆற்றியவர்.

கழகப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அரும்பணி ஆற்றி வந்த அன்புச் சகோதரர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்."

இவ்வாறு அந்த இரங்கல் செய்தில் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK EPS Mourning to Ex MP Radhakrushnan death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->