#BigBreaking | அதிமுக பொதுக்குழு வழக்கின் இறுதி தீர்ப்பு?! இபிஎஸ் இடைக்கால மனு தள்ளுபடி! - Seithipunal
Seithipunal


எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால மனுவாக, "இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் தன்னை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மனு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.

இதற்கிடையே, ஓபிஎஸ் தரப்பில் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால மனுவிற்கு, உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும், கடந்த வருடம் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

மேலும், இரட்டை இலை சின்னம் குறித்து எந்த வழக்கும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், தமிழக தேர்தல் அதிகாரியிடம் சின்னம் குறித்து முறையிடலாம் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் தேர்தல் ஆணையம் "பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஏற்றுக்கொள்ளவில்லை" என்று உச்சநீதிமன்றத்தை கைகாட்டி உள்ளதால், நாளையே அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பும் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK EPS vs OPS SC Case EC Reply Irattai ilai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->