அதிமுக செயற்குழு கூட்டம்! நிர்வாகிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு, கைகலப்பு, பரபரப்பு!
AIADMK Executive Committee meet some clash
அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும்.
இந்த செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மதுரையில் மாநாடு, அதிமுக தலைமையில் கூட்டணி, 2 கோடி உறுப்பினர் சேர்க்கை, ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டனங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
அப்போது கட்சி அலுவலக நுழைவாயில் வளாகத்தில் இரு நிர்வாகிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிப்பதற்காக, அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த அதிமுக நிர்வாகிகளில், இருவருக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாக்குவாதம், மோதலாகி, கைகலப்பாக கைகளுக்காக மாறியது.
அருகில் இருந்த நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த கைகலப்பு சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக செயற்குழு தீர்மானங்களின் விவரங்கள் :
English Summary
AIADMK Executive Committee meet some clash